தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யுத்தத்தில் பாகிஸ்தானின் உதவியை மறக்க முடியாது!

nawas-sherif-with-maithri-428x285யுத்­த­கா­லத்தில்  பாகிஸ்தான் வழங்­கிய ஆதரவு அளப்­ப­ரி­ய­தாகும். இதனை எமது அர­சாங்­கமும் நாட்டு மக்­களும் ஒரு போதும் மறந்­து­வி­ட­மாட்டோம் என ஸ்ரீலங்கா  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

“சார்க்” மாநாட்­டுக்கு பாகிஸ்தான் பிர­தமர் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்­வ­தா­கவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.

இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டுள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்­பிற்கு நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஸ்ரீலங்கா ஜனா­தி­பதி செய­ல­கத்தில் வழங்­கப்­பட்ட வர­வேற்பு மற்றும் இருநாடு­க­ளுக்­கி­டை­யே­யான எட்டு உடன்­ப­டிக்­கைகள் கையெ­ழுத்­திடும் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலேயே  ஸ்ரீலங்கா ஜனா­தி­பதி இவ்­வாறு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி இங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

இலங்­கைக்கும் – பாகிஸ்­தா­னுக்கும் இடையில் நீண்­ட­கால நட்­பு­றவு உள்­ளது. இதனை உறு­திப்­ப­டுத்தும் விதத்தில் பாகிஸ்தான் பிர­தமர் இங்கு விஜயம் செய்­தி­ருப்­பது மகிழ்ச்­சிக்­கு­ரிய விட­ய­மாகும்.

எமது அரசும் நாட்டு மக்­களும் இந்த விஜ­யத்தை கௌர­வத்­துடன் வர­வேற்­கின்றோம். இலங்­கையில் யுத்தம் இடம்­பெற்ற காலத்தில் எமது நாட்டின் தேசிய பாது­காப்­பிற்­காக பாகிஸ்தான் வழங்­கிய ஆத­ர­வையும், உத­வி­க­ளையும் நாம் ஒரு போதும் மறக்­க­மாட்டோம். இதனை எமது அர­சாங்­கமும் நாட்டு மக்­களும் கௌர­வத்­துடன் நினைவு கூரு­கின்றோம்.

அதே போன்று ஐ.நா. சபை­யிலும், ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு­விலும் ஐ.நா.வுக்­கான பாகிஸ்­தா­னிய நிரந்­தரப் பிர­தி­நிதி இலங்­கைக்கு வழங்­கிய ஆத­ரவை மறக்­க­மாட்டோம். அதற்­காக என்றும் நன்­றி­யு­டை­ய­வர்­களாய் இருப்போம்.

இவ்­வாறு இரண்டு நாடு­க­ளுக்­கி­டை­யேயும் வலு­வான நட்­பு­றவு நிலவி வரு­கின்­றது. இன்று எமது நாட்­டுக்கு பாகிஸ்தான் பிர­தமர் வருகை தந்­தமை பெரு­மைக்­கு­ரி­ய­தாகும். கடந்த ஆண்டில் நான் பாகிஸ்­தா­னுக்கு விஜ­யத்தை மேற்­கொண்­ட­போது இரு தரப்­பி­ன­ருக்­கி­டையே பல நட்­பு­றவு உடன்­ப­டிக்­கைகள் கையெ­ழுத்­தி­டப்­பட்­டன. அவற்றை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் நாம் அக்­க­றை­யுடன் செயல்­ப­டு­கின்றோம்.

அதே­போன்று இன்று இரு நாடு­க­ளுக்­கி­டையே 8 உடன்­ப­டிக்­கைகள் கையெ­ழுத்­தி­டப்­பட்­டுள்­ளன. எதிர்­கா­லத்தில் இவை­ய­ணைத்தும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும். அடுத்த சார்க் மாநாடு பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளது. இதற்கான அழைப்பை பிரதமர் விடுத்தார். அதனை ஏற்றுக் கொள்கிறோம்.

தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவுகள் வலுப்படுத்தப்படுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Comments
Loading...