Designed by Iniyas LTD
இலங்கைக்கு மேலும் கால நீடிப்பு வழங்குவது தமிழ் மக்களின் நலனை கருத்திற்கொண்டதல்ல- சிவசக்தி ஆனந்தன் ..
இலங்கைக்கு மேலும் கால நீடிப்பு வழங்குவது தமிழ் மக்களின் நலனை கருத்திற்கொண்டதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
மாறாக அது அரசாங்கத்தை பாதுகாப்பதற்கான செயற்பாடாகவே அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை வெளிப்[படுத்தியுள்ளார்.
எனினும் இந்த காலநீடிப்பு கண்காணிப்பிற்காகவே வழங்கப்படுவதாக கூட்டமைப்பு புதுக்கதை தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இவ்வாறு அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுவரும் தமிழரசு கட்சியின் தலைவர்கள், தமிழ் மக்களால் அண்மைய நாட்களில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களிலும் பங்கேற்பது அவர்களின் இரட்டை முகத்தை வெளிப்படுத்துவதாகவும் சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.