Designed by Iniyas LTD
யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் இளைஞர் பலி…
யாழ். மண்டைதீவு கடற்பரப்பில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் , இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மண்டைதீவை சேர்ந்த 19 வயதான ஜோன் அன்ரனி டினேஷ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் நேற்றையதினம் கடற்தொழிலுக்காக படகில் தனது நண்பருடன் இருந்த வேளை கடலில் காற்றின் வேகம் அதிகரித்தமையால் படகு கவிழ்ந்துள்ளது.
படகில் இருந்த இரு இளைஞர்களும் கடலில் நீந்தி கரை திரும்ப முற்பட்ட போதிலும் , ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் மற்றையவர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்.
கடலில் மீட்கப்பட்ட குறித்த இளைஞனின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.