தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இலங்கையிலும் யோகா தின விழா: இந்திய தூதரகம் சிறப்பு ஏற்பாடு

High-commission-of-india-in-colomboமுதல் சர்வதேச யோகா தினம் இலங்கையிலும் கடைப்பிடிக்கப்படவுள்ளது. கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகங்கள் இதற்காக சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளன.

கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் 21ஆம் தேதி காலை யோகா நிகழ்வுகள் நடத்தப்படுகிறன. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்துரகத்தின் ஏற்பாட்டில் இரண்டு சிறப்பு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளதாக துணைத்தூதர் ஏ.நடராஜன் அறிவித்துள்ளார்.

இதன்படி 21 ஆம் தேதி காலை யாழ்ப்பாண மத்தியகல்லூரி மைதானத்திவ் 5 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்கும் யோகா பயிற்சி நடைபெறவுள்ளது. இதனையடுத்து மாலையில் யாழ்ப்பாண ஆசிரியர் கல்லூரியில் 250 ஆசிரியர்கள் பங்கேற்கும் யோகா பயிற்சி நடைபெறவுள்ளதாக துணைத் தூதர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இந்திய பேராசிரியர் ஒருவரின் தலைமையில் மனவளக்கலை பயிற்சியான காயகல்ப பயிற்சியும் அது தொடர்பான அறிமுகமும் வழங்கப்பட உள்ளது. கண்டி, அம்பாந்தோட்டையில் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் சிறப்பு யோகா நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

Comments
Loading...