தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாகிஸ்தான் விடுதலை செய்த இந்திய மீனவர்கள் நாடு திரும்பினர்

pakistan returnபாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 113 இந்திய மீனவர்கள், தாயகம் திரும்பினர். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நேற்று தொடங்கியதை முன்னிட்டு, நல்லெண்ண நடவடிக்கையாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 113 இந்திய மீனவர்களை அந்நாட்டு அரசு விடுதலை செய்தது. இதையடுத்து, சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவர்கள் அனைவரும் லாகூரிலிருந்து, பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அட்டாரி வாகா எல்லை வழியாக நேற்றிரவு இந்தியா வந்தனர்.

 இந்திய ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும், சோதனைக்குப் பிறகு சொந்த ஊர்களுக்கு சென்றனர். முன்னதாக சிறையில் இருந்து வெளியே வந்த இந்திய மீனவர்களுக்கு பாகிஸ்தான் மீனவர்கள் சால்வையை பரிசாக தந்தனர்.

 விடுவிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த தினேஷ் என்ற மீனவர், பாகிஸ்தான் சிறையில் மனித நேயமற்ற முறையில் நடத்தப்பட்டதாக புகார் தெரிவித்தார். பாகிஸ்தான் மீனவர்கள் விடுவிக்கப்பட்டதன் எதிரொலியாக, குஜராத் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் மீனவர்கள் 88 பேரை இந்திய அரசு விடுவித்தது. அவர்கள் அனைவரும் நாளை இந்திய எல்லையோர பகுதியில் உள்ள பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றனர்.

Comments
Loading...