தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஷங்ரிலா விடுதியில் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதிகள் இருவரும் சகோதரர்கள் – பிரித்தானிய ஊடகம்

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலைத் தாக்குதல்களில் இரண்டு சகோதரர்கள் ஈடுபட்டதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கொழும்பு ஷங்ரிலா விடுதியில் தாக்குதல் மேற்கொண்ட பயங்கரவாதிகள் இருவரும் சகோதரர்கள் என்றும் பிரித்தானியா டெய்லி மெயில் கூறுகின்றது.

அவர்கள் தொடர்பான புகைப்படங்களையும் காணொளியையும் குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

மேலும் அவர்கள் இருவரும் இன்ஷாப் இப்ராஹிம் மற்றும் இல்ஹாம் இப்ராஹீம் ஆகியோர் எனவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...