Designed by Iniyas LTD
இலங்கை அரசாங்கம் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் தடுத்த வண்ணம் உள்ளது
அரசாங்கம் தமிழ்மக்களின் நிலைப்பாடுகளை வெளியே கொண்டுவரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் தமிழ் ஊடகவியலாளர்களை சிறையில் அடைக்கும் திட்டமிட்ட சதியாகவே ஓமந்தை சந்தர்ப்பத்தினை நோக்க வேண்டியிருப்பதாக கூட்டமைப்பின் வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பினில் அவர் கருத்து தெரிவிக்கையில்…
கடந்த பல தசாப்த காலமாக ஊடக அடக்குமுறை என்பது தமிழ் மக்களின் நியாய பூர்வமான போராட்ட நிலமைகளை வெளியில் கொண்டுவருவதனால் சர்வதேச ரீதியாக நியாய பின்புலம் கிடைத்துவிடும் என்பதனால் அரசாங்கம் ஊடகத்தணிக்கை, ஊடகக்கட்டுப்பாடு, இந்த இரண்டையும் விதிப்பதற்கு அப்பால் பல ஊடகவியலாளரை கொலை செய்தும், கடத்தி காணாமல் போகச்செய்தும், ஊடக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியும் பல்வேறு நெருக்கடிகளை ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் தொடர் தேர்ச்சியாக அச்சுறுத்தல் விடுத்த வண்ணம் உள்ளது.
யுத்த காலத்தில் இதன் நிலமை கடினமாக இருந்த போதும் கூட ஊடகங்களின் செயல் இன்றியமையாததாகவே காணப்பட்டது. ஏனெனில் முள்ளிவாய்க்காலில் மறைக்கப்பட்ட பல உண்மைகள் இவ்விதமான ஊடகவியலாளர்களால் வெளிவந்தது. இதனை இன்று சர்வதேச ரீதியாக பல்வேறு ரீதியான நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கை அரசாங்கம் ஊடகவியலாளர்களை தொடர்ந்தும் தடுத்த வண்ணம் உள்ளது. இலங்கையில் சட்ட ஜனநாயக நிர்வாக ஆட்சிமுறைமை இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது