தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வெள்ளைவான் கும்பல்

யாழ் குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன்  தொடர்புடைய கும்பல் ஒன்றை அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.van

வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் மற்றும் யாழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலின் பேரில் சுன்னாகம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவினரால்   குறித்த கும்பலைச் சேர்ந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்

இவர்கள் யாழ்ப்பாணம், சுன்னாகம் சுன்னாகம் மற்றும் ஊர்காவற்துறை ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

சுன்னாகம் பகுதியில் வெள்ளை வேனை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட குற்றச் செயல்களுடனும் இவர்களுக்கு தொடர்பு உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சந்தேகநபர்களிடமிருந்து வெள்ளை வேன் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் நாவற்குழி, கொடிகாமம், வரணி, ஊர்காவற்துறை, மானிப்பாய் மற்றும் அச்சுவேலி ஆகிய பகுதிகைளைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Comments
Loading...