Designed by Iniyas LTD
இலங்கை அரசு அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேச கூடாது: சுஷ்மா சுவராஜ் கண்டிப்பு
மீனவர் பிரச்சனையில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் இலங்கை அரசு செயல்படக் கூடாது என இந்தியா கண்டிப்புடன் கூறியுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தியா – இலங்கை இடையிலான மீனவர் பிரச்சனை இரு நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் சார்ந்தது என்று கூறியுள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டிய பிரச்சனையில் மீனவர்கள் கொந்தளிக்கும் வகையில் இலங்கை அரசு நடந்து கொள்ள கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக மீனவர்கள் ஆண்டிற்கு 65 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா விடுத்த கோரிக்கையை அண்மையில் இலங்கை அரசு நிராகரித்தது. 65 நாட்கள் அல்ல 65 மணிநேரம் கூட தமிழக மீனவர்களை தங்களது கடற்பரப்பில் அனுமதிக்க முடியாது என்றும் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த சமரவீரா கூறியதையே இந்தியா மறைமுகமாக கண்டித்துள்ளது.