தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜி.கே வாசனுக்கு திருமாவளவன் அழைப்பு!

வருகின்ற ஜூன் 9ம் தேதி தமிழகத்தில் எதிர்கால கூட்டணி ஆட்சி குறித்த கருத்தரங்கிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இதன்பொருட்டு தொல்.திருமாவளவன் இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள, பல்வேறு கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

gkvasan-thiruma

ஏற்கனவே தொல்.திருமாவளவன் இன்று மதிமுக பொதுச்செயலாளார் வைகோவிற்கு அழைப்பு கொடுத்திருந்தார். அதன்பின் சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனை, திருமாவளவன் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பெயரில் சென்னையில் நடைபெற இருக்கும் கருத்தரங்கில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த சந்திப்புக்கு பிறகு ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது,

மாநிலத்திலும், மத்தியிலும் கூட்டணி ஆட்சி வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். முன்பு ஜி.கே. மூப்பனார் ஒரு அணியை அமைத்த போதே இந்த கருத்து வலியுறுத்தப்பட்டது.

இப்போது திருமாவளவனும் அதே கருத்தை வலியுறுத்தி கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளார். அவரது கருத்து பற்றி கட்சி நிர்வாகிகளுடன் கலந்து பரிசீலித்து முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Loading...