தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவர் வைத்தியசாலையில் அனுமதி..

அனுராதபுரம் சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் இருவரது உடல்நிலைமோசமடைந்துள்ளதால் குறித்த இருவரும்  அனுராதபுரம் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவை சேர்ந்த சூரியகாந்தி ஜெயச்சந்திரன் மற்றும் சுன்னாகத்தை சேர்ந்தஇராசபல்லவன் தபோரூபன் ஆகிய இருவருமே இவ்வாறு  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்  உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள ஏனைய அரசியல் கைதிகளது உடல்நிலையும் மோசமடைந்து வருவதாக சிறைச்சாலை வைத்தியர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் ஈபிஆர்எல்எவ் சார்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் அனுராதபுரம் சிறைக்கு விஜயம் செய்து அரசியல் கைதிகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...