Designed by Iniyas LTD
கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் கடற்கரையில் சடலமாக மீட்பு..
கிழக்கு பல்கலைக்கழகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று மதியம் ல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற அவர் பிற்பகல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அவரது பாதணிகள் திருகோணமலை கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், இன்று பகல் அவரது சடலம் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண்ணின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் அவருடைய மரணத்தில் சந்தேககம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று மதியம் தனது கணவனுக்கு தொலைபேசி மூலம் அழைத்து திருகோணமலைக்கு வருமாறு அவர் கூறியிருந்ததாக விரிவுரையாளரின் கணவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.