தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உதவித்திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்டம்

மக்கள் நலன் காப்பகத்தின் “ அறிவுச்சோலை “ பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு உதவித்திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்டம் சிவசக்திபுரம் ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த பதினாறு மாணவர்களுக்கு ஐம்பதாயிரம் ( 50000/= ) ரூபாய் பெறுமதியான புத்தக பைகளும் இதற கல்வி கற்கும் உபகரணங்களும் திருமலை மாவட்ட மக்கள் நலன் காப்பக நிர்வாகத்தினரால் 30/10/2019 அன்று வழங்கப்பட்டது.

மேற்படி உதவித்திட்டத்துக்கான நிதி அனுசரணையை சுவிட்சர்லாந்து மக்கள் நலன் காப்பகம் ஊடாக அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி மாநிலத்தில் வசிக்கும் திரு. ஐங்கரன் விக்னேஸ்வரா அவர்கள் தனது நண்பர் அமரர் கதிரேசு முருகதாஸ்காந்தி ( வைத்தியர் ) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இவ்வுதவியை வழங்கியிருந்தார். திரு. ஐங்கரன் மற்றும் அவரது நண்பரின் குடும்பத்தினருக்கும் தாயகம் மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “
தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 –
+94 (77) 336 4868 – 001 (416) 301 8731
+44 7460 822946 – 0033 65 220 2168
+49 1521 4720724 – 0041 79 858 6593 00 61 470 217 055

Comments
Loading...