Designed by Iniyas LTD
உலகின் வயதான மனிதர் மரணம்…..
உலகின் வயதான மனிதராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த நபர் 113வது வயதில் காலமாகியுள்ளார்.
புகழ்பெற்ற அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் சார்பியல் தத்துவத்தை வெளியிட்ட சில மாதங்களுக்கு முன் 1905 ஆம் ஆண்டு பிறந்தவர் மசாசோ நோனகா.
உலகின் வயதான மனிதராக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்த அவர் திடீரென உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
உணவு விடுதி நடத்தி வந்த மசாசோ நோனகா, ஓய்வுக்குப் பின் தொலைக்காட்சியில் மல்யுத்தப் போட்டிகளை ஆர்வத்துடன் கண்டு ரசித்ததாகவும்,
இனிப்புகளை விரும்பி உண்டதாகவும் ஜப்பான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை உலக அளவில் வயதான நபர்கள் அதிகம் பேர் வாழும் நாடாக ஜப்பான் இருப்பது குறிப்பிடத்தக்கது.
