தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐஐடி இயக்குனரின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை: புனியா தகவல்

iitசென்னை ஐஐடியில் மாணவர் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பாக அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தியளிக்கவில்லை என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் புனியா தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐஐடியின் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத் தலைவர் முன் ஆஜராகி, விளக்கம் அளித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த புனியா ஐஐடியின் விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்றும், 10 நாட்களுக்குள் விரிவான விளக்கம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்‌டத்திற்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்றும் புனியா கூறினார்.

Comments
Loading...