தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது என்பது காலந்தாழ்த்தும் முயற்சி- ரோஹண ஹெட்­டி­யா­ரச்சி ..

அர­சாங்கம்   தொடர்ந்து மாகா­ண­சபை தேர்­தலை காலந்­தாழ்த்­து­வ­தற்கே முயற்­சிப்­ப­தாக பெப்ரல் அமைப்பின் நிறை­வேற்று பணிப்­பாளர் ரோஹண ஹெட்­டி­யா­ரச்சி குற்­றம்­ சுமத்தியுள்ளார்.

ஒன்­பது மாகா­ண­ச­பை­க­ளுக்­கு­மான தேர்­தல்­களை ஒரே தினத்தில் நடத்­து­வது தொடர்பில் விளக்­க­ம­ளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தற்­போ­தைய அளவில் 6 மாகா­ண­ச­பை­களின் நிர்­வாக நட­வ­டிக்­கைகள் ஆளு­நர்­களின் அதி­கா­ரத்­துக்கு சென்­றுள்­ள ­நி­லையில்,

முடி­வுற்ற மாகாண சபைகள் அனைத்­துக்­கு­மான தேர்­தலை உட­ன­டி­யாக நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் 6 மாகா­ண­ச­பை­க­ளுக்கும் தேர்­தலை நடத்­து­வ­தற்கு மாறாக 9 மாகா­ண­ச­பை­க­ளுக்­கு­மான தேர்­தலை ஒரே தினத்தில் நடத்­து­வதற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

இந்த தீர்­மானம் சாத­க­மாக முடி­வான இருப்­பினும், நடை­மு­றையில் சிக்­க­லுக்­கு­ரி­ய­து எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒரே தினத்தில் தேர்தல் இடம்­பெ­று­மாயின் அர­சாங்கம்  உட­ன­டி­யாக  தேர்­தலை நடத்த வேண்டும் என்றும்,

மாறாக எஞ்­சி­யுள்ள மாகா­ண­ச­பை­களும் கலைக்­கப்­படும் வரை தேர்தல் காலந்­தாழ்த்­தப்­ப­டு­மாயின் அனைத்து தேர்தல் நிர்­வாக பிரி­வு­களும் அசௌ­க­ரி­யத்­தை சந்­திக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே  நடைமுறைக்கு சாத்தி யமான ஒரு முறையில் கால எல்லை முடிவுற்றுள்ள வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மாகாணசபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...