Designed by Iniyas LTD
கஞ்சா விற்பனையில் பல்கலைக்கழக மாணவன்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர் ஒருவர் 6 லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை பொலிஸார் சந்தேக நபரான மாணவனை நேற்று கைது செய்துள்ளனர்.
கொழும்பில் இருந்து கதிர்காமம் நோக்கி செல்லும் பஸ்ஸில் பயணித்த மாணவர் மெதகம சந்தியில் இறங்கியுள்ளார்.அங்கு சந்தேகம் ஏற்படும் வகையில் காணப்பட்டதுடன் சாதாரண உடையில் அவ்விடத்திற்கு சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், மாணவருடன் கை குலுக்கியதுடன் தனக்கு ஹெரோயின் போதைப் பொருளை கொள்வனவு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அப்போது சந்தேக நபர் தனது காற்சட்டை பையில் வைத்திருந்த 50 கிராம் ஹெரோயினை கையில் எடுத்த போது அங்கு சென்ற பொலிஸார் மாணவனை கைது செய்துள்ளனர்.கொழும்பு மகரகம பிரதேசத்தில் உள்ள செல்வந்த வர்த்தகர் ஒருவருடன் இணைந்து 27 வயதான இந்த மாணவன் நீண்டகாலமாக ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.