Designed by Iniyas LTD
பாப்பரசர் முதலாம் பிரான்சிஸிடம் விசேட கோரிக்கையை முன்வைத்த ஆயர் ஜோசப் ஆண்டகை
மன்னார் மறை மாவட்ட பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, பாப்பரசர் முதலாம் பிரான்சிஸிடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.மன்னாரில் தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் நெருக்கடி நிலைமைகளை நேரில் பார்வையிடமன்னாருக்கு விஜயம் செய்யுமாறு இராயப்பு ஜோசப் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய கர்தினால் ஒருவரின் ஊடாக பாப்பரசர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார் என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.பாப்பரசரின் இலங்கை விஜயம் தொடர்பிலான பணிகளை இலங்கை கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கர்தினலின் ஊடாக கோரிக்கை விடுக்காது மரபுகளை மீறி இராயப்பு ஜோசப் ஆண்டகை இந்திய கர்தினால் ஒருவரின் ஊடாக பாப்பரசருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.