Designed by Iniyas LTD
கடந்த வருடம் 239 சிரேஸ்ட அதிகாரிகள் உட்பட 59267 சிறீலங்கா படையினர் தப்பியோட்டம்
இலங்கையில் கடந்த சில வருடங்களில் 239 சிரேஸ்ட அதிகாரிகள் உட்பட 59,267 முப்படையினர் தமது படைப்பிரிவுகளில் இருந்து தப்பிச்சென்றுள்ளனர். இலங்கையின் நாடாளுமன்றத்தில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவர்களை கைதுசெய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாட்டில் இடம்பெற்று வருகின்ற குற்றச்செயல்களின் பின்னணியில் படைகளில் இருந்து தப்பிச்சென்றோரே இருந்து வருவது தெரியவந்துள்ளது.