Designed by Iniyas LTD
கனடாவின் அடுத்த பிரதமராகிறார் ஜஸ்டின் டிரேடியாவ்
கனடாவில் திங்களன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜஸ்டின் டிரேடியாவ் (JUSTIN TREDEAU) தலைமையிலான லிபரல் கட்சி ஆட்சி அமைப்பது உறுதி ஆகியுள்ளது. மொத்தமுள்ள 338 தொகுதிகளில் 185 இல் அக்கட்சி முன்னிலை வகிக்கிறது.
இதன் மூலம் ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் ஒன்பது ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வருகிறது. தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள ஸ்டீபன் ஹார்பர் லிபரல் கட்சித் தலைவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டுள்ளார்.
கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலகுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆட்சியைக் கைப்பற்றுவது உறுதியாகி உள்ள நிலையில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய JUSTIN TREDEAU, மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாகக் கூறினார். நேர்மறை அரசியலுக்கு கிடைத்த வெற்றி இது என்றும் அவர் தெரிவித்தார்.