Designed by Iniyas LTD
ருமேனியாவில் தேர்தலை அறிவிக்க கோரி மக்கள் போராட்டம்
ருமேனியாவில் நாடாளுமன்றத் தேர்தல்களை முன்கூட்டியே நடத்தக்கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டின் பிரதமர் விக்டர் பான்டா, புகாரெஸ்ட் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீவிபத்திற்கு பொறுப்பேற்று பதவி விலகிய பின்னரும் ருமேனியாவில் போராட்டம் ஓயவில்லை. அரசியல் சீரமைப்பு மற்றும் முன் கூட்டியே தேர்தல் போன்றவற்றை வலியுறுத்தி புகாரெஸ்டில் நடந்த பேரணியில் சுமார் 30ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் பேரணிகள் நடத்தப்பட்டன. பான்டா பதவி விலகியது அரசியல் மாற்றத்தின் முதல் படி என்று தெரிவித்துள்ள மக்கள், ஊழல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று புகாரெஸ்டின் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 32 பேர் உயிரிழந்ததை அடுத்து ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டம் ருமேனியாவில் தீவிரமடைந்தது.