Designed by Iniyas LTD
கனடா நாடாளுமன்றத் தேர்தல் இன்று வாக்குப்பதிவு
கனடா நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தற்போதைய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கு, ஜஸ்டின் (JUSTIN TRUDEAU) தலைமையிலான லிபரல் கட்சி கடும் சவாலைத் தரும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
338 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தலில் புதிய ஜனநாயகக் கட்சியும் கணிசமான இடங்களை பிடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தான் மீண்டும் பிரதமராக வரும் பட்சத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவேன் என பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் உறுதி தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் அமெரிக்காவுடனான உறவு மறுசீரமைப்பு, சிரியா மற்றும் ஈராக்கில் நடத்தப்பட்டு வரும் வான் தாக்குதல் நடவடிக்கையில் இருந்து விலகுவது உள்ளிட்டவற்றை லிபரல் கட்சியின் ஜஸ்டின் (JUSTIN TRUDEAU) முன்வைத்துள்ளார்.
ஞாயிறன்று வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவு ஒன்றின் படி லிபரல் கட்சி 37.3சதவீத வாக்குகளையும், ஆளும கன்சர்வேடிவ் கட்சி 30.5சதவீத வாக்குகளையும் பெறும் என்று குறி்ப்பிடப்பட்டுள்ளது.