தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கன மழை எதிரொலி : பேரிடர் மீட்புக் குழுவினர் சென்னை விரைந்தனர்

Heavy-Rain-Lashed-In-Chennai1கன மழை காரணமாக வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் சென்னை விரைந்துள்ளனர்.

கன மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதால் ஏராளமான பொதுமக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

எனவே, சென்னையில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவைச் சேர்ந்த 70 பேர் சென்னைக்கு விரைந்துள்ளனர்.

இவர்கள் 2 குழுக்களாகப் பிரிந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

Comments
Loading...