தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும்: ரமணன் தகவல்

ramananதமிழகத்தில் கடற்கரையோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள இரண்டு காற்றழுத்த தாழ்வு நிலைகள் காரணமாக கடற்கரையோர மாவட்டங்களான திருவள்ளூர் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலும், காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக ரமணன் கூறினார்.

மேலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமானது முதல் கன மழை பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். அவ்வப்போது மிகக் கன மழை பெய்யும். தமிழகத்தில் பரவலாக அடுத்த 3 நாட்கள் முதல் 4 நாட்கள் வரை மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இலங்கை மற்றும் தமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலைகள் நிலை கொண்டுள்ளன. இது மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், சென்னையில் தரைக்காற்று வேகமாக வீசக் கூடும் என்றும் ரமணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Comments
Loading...