Designed by Iniyas LTD
காங்கேசந்துறை துறைமுகத்திற்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர்…
பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி காங்கேசன்துறை செல்லவுள்ளதாக அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி காங்கேசந்துறை துறைமுகம் 2021 ஆம் ஆண்டளவில் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய கப்பல் சேவையை கொண்ட துறைமுகமாக மாற்றப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிடம் இருந்து சலுகை அடிப்படையில் கிடைத்த நான்கு கோடி 50இலட்சம் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தியே இந்த அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த புதிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், காங்கேசந்துறையில் புதிய வாயில் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் சாகல ரட்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.