Designed by Iniyas LTD
காணாமற்போனோர் தொடர்பான ஐ.நாசெயலணியுடன் இணைந்து பணியாற்ற ஸ்ரீலங்கா தயாராம்!
காணாமற்போனோர் தொடர்பான ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இந்த அறிக்கை தொடர்பாக, இலங்கை அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “பலவந்தமாக காணாமல்ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஆராயும் ஐ.நா செயலணி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம், 18 ஆம் திகதி வரை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தது.
தொடர்புடைய பதிவு
சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னரே ஐ.நாவின் இந்த செயலணி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டது.
இலங்கையின் தற்போதைய அரசாங்கம், மனித உரிமைகளை பாதுகாக்கவும் ஜனநாயகத்தைப் பலப்படுத்தவும் நல்லாட்சியை ஏற்படுத்தவும் சட்டத்தின் ஆட்சிப்படுத்தலை நிலைநிறுத்தவும் நல்லிணக்கத்தையும், அபிவிருத்தியையும் முன்னெடுக்கவும் தன்னை அர்ப்பணித்துள்ளது.
அந்த வகையில் காணாமல்போனோர் குறித்த ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது நல்லிணக்க செயற்பாட்டில் ஒரு முக்கியமான அம்சமாக அமையுமெனவும், அனைத்து குடிமக்களினதும் மனித உரிமைகளை பாதுகாப்பதில் இது ஒரு முக்கிய நடவடிக்கையாக அமையுமெனவும் அரசாங்கம் நம்புகிறது.
அந்த வகையில், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் ஐ.நா செயலணியுடன் தொடர்ச்சியாக, நெருக்கமாக இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கம் தன்னை அர்ப்பணிக்கிறது.
அத்துடன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஆராயும் ஐ.நா செயலணி முன்வைத்துள்ள பரிந்துரைகளையும் இலங்கை அரசாங்கம் மிகவும் விரிவான முறையில் ஆய்வு செய்து வருகிறது.
என தெரிவித்துள்ளது.