தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது : வாசுதேவ நாணயக்கார

வலிந்து காணாமலாக்கப்பட்டடோர் தொடர்பாக எந்த தகவலையும் வழங்காமல் அவர்களது உறவுகளை அரசாங்கம் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். வலிந்து காணாமலாக்கப்பட்டடோர் தினம் நேற்று (வெள்ளிக்கிழமை) வடக்கு மற்றும் கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டது.

இவ்விடயம் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் காணாமல்போனோர் அலுவலகச் செயற்பாடுகளின் மீதும் மக்கள் நம்பிக்கையற்றே உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆகையால் எதிர்வரும் எமது ஆட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய தீர்வு நிச்சயம் பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.


Comments
Loading...