தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் போனவர்கள் இந்தியப்படைகாலத்திலும் தான்,விசாரணைஅறிவிப்பு விரைவில்..

images (2)

இந்திய அமைதிப்படையினரின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பான, விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை சிறீலங்காஅரசாங்கம் வெளியிடவுள்ளது.

 சிறீலங்காவில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்படையினரின் நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட சிறீலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

1987ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இந்திய அமைதிப்படையினர்  சிறீலங்காவில் நிலைகொண்டிருந்தனர். இந்தக் காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலானவர்கள் காணாமல் போயுள்ளதாக தங்களிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டதாகவும் சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் காணாமல் போனவர்களின் நிலைமை குறித்து கண்டறியும் நோக்கில் இந்திய அமைதிப்படையினரின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நிறுவப்பட்டுள்ள காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை நடாத்தும் ஆணைக்குழு  1990இற்கு முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...