தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் போனோரின் உறவினர்களை சந்தித்த அல் ஹூசைன்!

Untitledயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஷெயிட் ராட் அல் ஹீஸைன்  உலங்கு வானூர்தியில் யாழ்.மாநகரசபை மைதானத்தை வந்தடைந்தார். ஆணையாளரின் வருகையின் போது காணாமற் போனோரின் உறவுகள் அவ்விடத்தில் ஒன்றுகூடி அவரை சந்திக்க முற்பட்ட வேளை அவர் அவர்களுக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் கலந்துரையாடினார்.
கலந்துரையாடும் போது அவர் கூறியதாவது, நான் உங்களுக்கென தனியாக நேரம் ஒதுக்கியுள்ளேன். உரிய நேரத்தில் உங்களுடன் கலந்துரையாடி உங்கள் பிரச்சினைகள் பற்றி அறிந்து கொள்வேன் என்றும், தற்பொழுது நான் வடக்கு முதலமைச்சரைச் சந்திக்க வேண்டும். ஆகவே உங்களுக்குரிய நேரத்தில் நிச்சயம் சந்தித்துக் கலந்துரையாடுவேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Comments
Loading...