Designed by Iniyas LTD
மட்டு நகரில் 2500 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்!
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2500க்கு மேற்பட்டோர் இதுவரை காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு தாயக மறுமலர்ச்சிக் கழகத்தின் பணிப்பாளர் கலாநிதி ஏ.செல்வேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற காணா மல்போனோர் கடத்தப்பட்டோரின் உறவினர்களின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2500க்கு மேற்பட்டோர் கடத்தப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர். அதேபோன்று கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 350 பேருக்கு மேல் கடத்தப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர்.
காணாமல் போனோரை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து காணா மல்போன கடத்தப்பட்ட சுமார் 2200 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களில் சுமார் 450 பேரையே இந்த ஆணைக்குழு விசாரித்துள்ளது. இந்த ஆணைக்குழு காணாமல் போன கடத்தப்பட்ட உறவினர்கள் அவர்களின் பிள்ளைகள் அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும்.
தாயக மக்கள் மறுமலர்ச்சிக் கழகம் மற்றும் காணாமல் போன கடத்தப்பட்ட உறவினர்கள் சேர்ந்து இந்த விழிப்புணர்வு போராட்டத்தை இன்றைய 68 ஆவது சுதந்திர தினத்தில் நடத்துகின்றோம்.
பல தடவைகள் காணாமல்போன கடத் தப்பட்ட உறவினர்கள் ஆர்ப்பாட்டங்கள் விழிப்புணர்வு போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை எந்த முடிவுமில்லை. அதே போன்று இன் றைய 68ஆவது சுத்நதிர தினத்திலும் இந்த விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட் டுள்ளோம்.
இந்த விழிப்புணர்வு போராட்டமானது அரசாங்கத்திற்கு எதிரானதோ, அல்லது சுதந்திர தினத்திற்கு எதிரானதோ அல்ல காணாமல் போன கடத்தப்பட்டவர்களை கண்டு பிடித்து தருமாறு கோரிய விழிப்புணர்வு போராட்டமாகும்.
காணாமல்போன கடத்தப்பட்டவர்களை உயிருடன் கண்டு பிடித்து தரவேண்டும் இல்லையேல் அவர்கள் எப்படி காணாமல் போனார்கள் அதற்கு யார் காரணம் என்பதை கண்டறிந்து பதில் தரவேண்டும் இது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதனை அரசாங்கம் உடனடியாக செய்ய வேண்டும்.
காலத்தை இழுத்தடிக்காமல் இதற்கான தீர்வை இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோர் பெற்றுத்தர வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நடவடிக்யையே இந்த போராட்டமாகுமென அவர் மேலும் தெரிவித்தார்.