தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு!

625.500.560.350.160.300.053.800.900.160.90-300x167மொறட்டுவை- அங்குலானை பிரதேசத்தில் தேவாலயத்திற்கு பின்புறம் உள்ள கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த 15 வயதான மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடற்படையினர் மற்றும் பொலிஸாரின் இரண்டு நாள் தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அங்குலானை பிரதேசத்தை சேர்ந்த மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த மாணவன் நீராடச் சென்ற போதே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவிலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை, அங்குலானை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...