தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கால்பந்து தொடரில் கொல்கத்தா அணி அபார வெற்றி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கொல்கத்தா அணி 3–0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றுள்ளது.முதலாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது.

இதன் முதல் போட்டி கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா  மற்றும் மும்பை அணிகள் மோதின.போட்டியின் இரண்டாவது நிமிடத்தில் மும்பை அணி அணித்தலைவர் சையத் ரகிம் நபி, இத்தொடரின் முதல் ‘மஞ்சள் அட்டை’ பெற்றார்.kolkata_football_team_001

பின், 18வது நிமிடத்தில் கிடைத்த ‘கார்னர்’ வாய்ப்பை மும்பை அணி வீரர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. தொடக்கத்தில் இருந்து துடிப்பாக விளையாடிய கொல்கத்தா அணிக்கு 27வது நிமிடத்தில் பிக்ரு டெபெரா லெமேசா கோல் அடித்தார்.

இதற்கு மும்பை அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் கொல்கத்தா அணி 1–0 என முன்னிலை வகித்தது.இரண்டாவது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்து கொல்கத்தா அணிக்கு 69வது நிமிடத்தில் போர்ஜா பெர்ணான்டஸ் ஒரு கோல் அடித்தார்.

தொடர்ந்து போராடிய மும்பை அணியின் கோல் அடிக்கும் முயற்சிகளை, கொல்கத்தா அணி கோல் கீப்பர் சுபாசிஷ் ராய் சவுத்தரி அருமையாக தடுத்தார்.இதனால் மும்பை அணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 87வது நிமிடத்தில் கொல்கத்தா அணி கேப்டன் லுாயிஸ் கார்சியாவுக்கு பதிலாக களமிறங்கிய அர்னால், ‘ஸ்டாப்பேஜ்’ நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.

ஆட்டநேர முடிவில் கொல்கத்தா அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

Comments
Loading...