Designed by Iniyas LTD
கிண்டி வாகன விபத்தில் பழ.நெடுமாறன் காயம்!
சென்னை கிண்டியில் இன்று மாலை நடைபெற்ற சிறு விபத்து ஒன்றில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் லேசான காயம் அடைந்தார்.
சென்னை கிண்டி பேருந்து நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தில் இன்று மாலை வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அப்பொழுது எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற ஒரு வாகனம் பிரேக் பிடிக்க, பின்னால் வந்த வாகனங்கள் அனைத்தும் ஒன்றோடு ஓன்று மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் தன்னுடைய காரில் பயணம் செய்து கொண்டிருந்த, பழ நெடுமாறனுக்கு லேசான காயம ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.