தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விண்ணில் மாதம் ஒரு செயற்கைக்கோள் ஏவும் பணி தீவிரம்: மயில்சாமி அண்ணாதுரை

mayilமாதம் ஒரு செயற்கைக்கோள் ஏவும்பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் வாத்சல்யம் சமூக தொண்டு நிறுவனத்தின் விவேகதர்சன் 2020 என்ற கிராமப்புற மேம்பாட்டு திட்டத் துவக்க விழாவில் கலந்து கொள்ள வந்த இஸ்ரோ விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை  செய்தியாளர்களிடம் கூறியது.

மாதம் ஒரு செயற்கோளை ஏவுவது என்ற கொள்கையின் அடிப்படையில் அடுத்து வரும் 3 மாதங்களுக்கான மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் ஆயத்தப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன்படி ஆக்ஸ்ட் மாதம் பருவநிலைகள் மாற்றும் குறித்த தகவல்கள் அறிவது பற்றிய இன்சாட் 3 டி ஆர் செயற்கைகோளும், செப்படம்பர் மாதத்தில் பிஎஸ்எல்வி கேட் சாட் என்ற செயற்கைக்கோளும், அக்டோபர் மாதத்தில் தகவல் தொழில் நுட்பம் பற்றிய ஜி.சாட் 18 ஆகிய 3 செயற்கைகோளும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

Comments
Loading...