Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் கூட்டமைப்பின் கூட்டத்திற்கு வெளியே காணாமல் போன உறவுகள் ஆா்ப்பாட்டம்.
கிளிநொச்சி கூட்டுறவாளா் மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை காணாமல் போன உறவுகளின் ஆா்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனா்.
வவுனியா காணாமல் போன உறவுகளின் அமைப்பு, மற்றும் வவுனியா பிரஜைகள் குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆா்ப்பாட்டம் இடம்பெற்றது
ஆா்ப்பாட்டத்தில் ஈடு்ப்பட்டவா்கள் கூட்டமைப்பே தமிழ் மக்களை மாற்றானிடம் கையேந்தும் இனமாக மாற்றாதே,கூட்டமைப்பே வாக்கு பொறுக்கவா எங்கள் பிள்ளைகளின் தியாம் உனக்குத் தேவை, கூட்டமைப்பே சா்வதேசத்திடமிருந்து சிறிலங்கா அரசை பிணை எடுக்காதே,ரணிலின் யாழ் பொங்கல் செய்தி கூட்டமைப்பு எழுதிக்கொடுத்த அறிக்கையா?,ஜனாதிபதியுடன் உணவருந்தவா?
உாிமை பற்றி பேசவா பாராளுமன்றம் அனுப்பினோம்,கூட்டமைப்பே தமிழ் மக்களுக்கு அரசியல் சாசனமா அடிமை சாசனமா எழுதப்போகின்றாய் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனா். இதன் போது கவனயீா்ப்பில் ஈடுப்பட்டவா்கள் உள்ளே செல்லவிடாது பொலீஸாரினால் தடுத்துவிட்டனா்
