Designed by Iniyas LTD
டெங்கு பலியெடுத்த கிளிநொச்சி இந்துக் கல்லூரி மாணவி

கிளிநொச்சியில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி மாணவி ஒருவர் இறந்துள்ளார். கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர மாணவி செல்வராசா துளசி என்பவரே இவ்வாறு டெங்கு காய்ச்சால் இறந்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு அபாயம் ஏற்பட்டிருப்பதை சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை என்பன எச்சரித்திருந்தன. பாடசாலை சூழல்களை துப்புரவாக வைத்திருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு அபாயம் குறித்து மாவட்ட அரசாங்க அதிபரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் பலதரப்பட்ட சமூகங்களும் இணைந்து டெங்கு அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.
பருவம் பிழைத்த காலநிலை போன்ற காரணங்களால் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் பலதரப்பட்ட பகுதிகளிலும் வைரஸ் காய்ச்சால் பரவியிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் கூறுகின்றன. அத்துடன் பாடசாலைகள் சிலவற்றிலும் மாணவர் வரவிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
Attachments area