Designed by Iniyas LTD
தமிழகத்தில் மது இல்லாத, ஊழலற்ற நேர்மையான அரசு அமைக்கப்படும் – மக்கள் நலக் கூட்டணி உறுதி
தமிழகத்தில் மது இல்லாத, ஊழலற்ற நேர்மையான அரசு அமைக்கப்படும் என மக்கள்நலக் கூட்டணி உறுதி அளித்துள்ளது. அந்தக் கூட்டணியின் நிர்வாகிகள் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய மக்கள்நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வை
கோ, மாற்று அரசியல் எழுச்சிக்கான மாநாடு மதுரையில் வரும் 26ஆம் தேதி நடைறெவுள்ளதாகக் கூறினார். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் ஆட்சியில் இருந்தபோது மணல், கிரானைட் ஆகியவற்றில் ஊழல் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டினார். கூட்டணி குறித்து தங்களின் நிலைப்பாட்டை ஏற்கனவே தெரிவித்து விட்டதாகவும், இது குறித்து தேமுதிக, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிகளே இனி முடிவு எடுக்க வேண்டும் என்றும் வைகோ கூறினார்.