Designed by Iniyas LTD
கூடங்குளத்தில் ஜனவரி முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும்!
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் நிலையில் அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என இந்திய அணுசக்தி ஆணையம் அறிவித்துள்ளது.
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அணுசக்தி ஆணைய தலைவர் சேகர் பாசு இதனை தெரிவித்தார். பராமரிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் பணிகள் காரணமாகவே முதல் உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்ததாகவும், அவர் குறிப்பிட்டார்.
அணுமின் நிலையத்தின் 2ஆவது உலையில், வரும் ஏப்ரல் மாதம் மின் உற்பத்தியை தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சேகர் பாசு தெரிவித்தார். 3ஆவது மற்றும் 4ஆவது உலைகளை அமைக்கும் பணி நிறைவடைய 8ஆண்டுகள் ஆகும் எனவும் அணுசக்தி ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார்.