தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவர்களால் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்று  காலை யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரி மாணவர்களால் எதிர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கல்லூரியில்  கற்­பிக்­கும் ஆசி­ரி­யர் ஒரு­வ­ரைத் தாக்­கிய குற்­றச்­சாட்­டில், அதே பாட­சா­லை­ சேர்ந்த  பழைய மாண­வர் இருவரைக் கைது செய்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே  மாணவர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆசி­ரி­யர் கடமை முடிந்து வீடு திருப்­பிக் கொண்­டி­ருந்­த ­போது பாட­சா­லைக்கு அண்­மை­யில் வைத்து இனம் தெரி­யாத சில­ரால் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்­னர் தாக்­கப்­பட்மை நினைவில்கொள்ளத்தக்கது.

இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் கல்லூரியின்  பழைய மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த பழைய மாணவர்கள் மீது பொய்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக  மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்களை விடுவிக்கக் கோரியே  இன்று மாணவர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...