Designed by Iniyas LTD
நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாக சர்ச்சைக்குரிய பகுதியாக இருந்து வருகின்ற நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த கேமராக்களை உடனடியாக அகற்றுமாறு போலீசாருக்கு உத்தரவிட்ட நிலையில் இந்த விடயம் தொடர்பாக செய்தி சேகரிப்பு நடவடிக்கைக்காக சென்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் சுயாதீன ஊடகவியலாளரான கணபதிப்பிள்ளை குமணன் அவர்கள் கொக்கிளாய் போலீஸ் நிலைய போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்பட்டிருக்கிறார்.
ஊடகவியலாளர் கமராவையும் சேதப்படுத்தி அவரை தீய வார்த்தைகளால் எச்சரித்ததாகவும் ஊடகவியலாளர் தெரிவித்திருக்கின்றார்