தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் சரணடைந்தார்

yuvarajகோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ்  நாமக்கல் மாவட்ட சிபிசிஐடி அதிகாரிகள் அலுவலகத்தில் சற்று முன் சரணடைந்தார்.

 முன்னதாக யுவராஜ் வெளியிட்டிருந்த வாட்ஸ் ஆப் ஆடியோவில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், சிபிசிஐடி உயர் அதிகாரிகள் நாகஜோதி, அன்பு, ஸ்டாலின், வேலவன் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 10.30 மணிக்கு சரணடைய இருப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் சற்று முன்பாக சரணடைந்தார்.

 தனது வீட்டில் சோதனை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், மிக கண்ணியமாக நடந்து கொண்டதாகக் கூறியிருந்த யுவராஜ், தான் சரணடைவதில் எந்த பிரச்னையும் இல்லை என்றும், தலைமறைவாக இருப்பதால் காவல்துறையின் பெயர் கெட்டுப்போய் விடக் கூடாது என்பதற்காகவே தான் சரணடைவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது

Comments
Loading...