தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

19 நாகை மீனவர்களுக்கு வரும் 23-ம் தேதி வரை சிறை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

fishermen1எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 19 பேரை, அக்டோபர் 23 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 19 பேர் நடுக்கடலில் இரவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், அவர்களை கைது செய்ததுடன் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

 இலங்கை சிறைகளில் ஏற்கனவே தமிழக மீனவர்கள் 35 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். 37 விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

Comments
Loading...