Designed by Iniyas LTD
கோரப் புயலால் நகரமே அழிந்த கொடுமை! 140 பேர் பலி
ஹைட்டியை தாக்கிய மாத்யூ புயலால் இதுவரையிலும் 102 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவுக்கு தென் பகுதியில் உள்ள கரீபியன் கடல் பகுதியில் புயல் ஒன்று மையம் கொண்டிருந்தது. மாத்யூ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் நேற்று முன்தினம் ஹைட்டியை தாக்கியது.
230 கி.மீ வேகத்துக்கு பயங்கர காற்று வீசியதால் கடும் அழிவுகள் ஏற்பட்டுள்ளன. இதுவரையிலும் 140 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் தென்பகுதியில் இருக்கும் ரோஷ்-அ-பெடூ நகரில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தென் கடலோர பகுதி முழுவதும் பேரழிவை சந்தித்துள்ளதாகவும், குறிப்பாக ஒரு நகரே ஒட்டுமொத்தமாக அழிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏராளமானவர்கள் தங்கள் வீடுகளை இழந்த நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்புபணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.