தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது சென்னை அணி

அரையிறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதிப்போட்டிக்குள் சென்னை அணி நுழைந்தது. இந்தியாவில் நடைபெற்று வரும் 6வது சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் அரையிறுதிப்போட்டியில் கொல்கத்தா அணி ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.csk_kxip_001

இதனையடுத்து பரபரப்பான இன்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்  மோதின. ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் எடுத்தது. பிளசிஸ் 46 ஓட்டங்களும், டுவைன் பிராவோ அரைசதம் கடந்து 7 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்களும் எடுத்தனர். ஜடேஜா ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களும், டுவைன் ஸ்மித் 14 ஓட்டங்களும் எடுத்தனர்.

தொடர்புடைய பதிவு

பந்துவீச்சில் பஞ்சாப் அணி சார்பில் பர்விந்தர் அவானா 4 விக்கெட்டும், அக்ஷர் படேல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனையடுத்து 183 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சில் அடுத்தடுத்து சரிந்தன. அதிகபட்சமாக அக்ஷர் படேல் 31 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 22 ஓட்டங்களும் எடுத்தனர்.

18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து பஞ்சாப் அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன்மூலம் சென்னை அணி இறுதிப்போட்டிக்குள் கம்பீரமாக நுழைந்துள்ளது.

அசத்தலாக விளையாடிய டுவைன் பிராவோ ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

Comments
Loading...