தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதிய சிக்கலில் கொல்கத்தா அணி

சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் கொல்கத்தா மோதவுள்ள நிலையில், அந்த அணிக்கு புதிதாக ஒரு நெருக்கடி வந்துள்ளது. கொல்கத்தா அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் விதி முறைக்கு புறம்பாக பந்து வீசுகிறார் என நடுவர்கள் 2வது முறையாக குற்றம் சாட்டியுள்ளனர்.sunil

இதனையடுத்து அவர் சென்னை அணியுடனான இறுதிப்போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக டொல்பின்ஸ் அணியுடனான போட்டியில் இவரது பந்து வீச்சு குறித்து நடுவர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

அவர் வீசிய நான்கு ஓவர்களில் மூன்று பந்துகளில் சந்தேகம் தெரிவித்தனர். ஆனால் நேற்று ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான சம்பியன்ஸ் லீக் அரையிறுதி போட்டியில் அவர் வீசிய அனைத்து பந்துகளும் விதிமுறைகளை மீறியதாக நடுவர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் உடனடியாக தடை செய்யப்பட்டார்.

இந்த புகாரையடுத்து சென்னை ராமசந்திரா பல்கலைக்கழகத்திற்கு அவரை அனுப்ப கொல்கத்தா அணிக்கு அறிவுறுத்தப்படலாம். அங்கு அவரது பந்துவீச்சு சோதனை செய்யப்பட்டு அதை எவ்வாறு மாற்றலாம் என ஆலோசனைகள் வழங்கப்படும்.

கொல்கத்தா அணியின் முக்கிய பந்துவீச்சாளர் திடீரென தடை செய்யப்பட்டுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும்.

Comments
Loading...