தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதத்தை இசைப்பதில் பிரச்சினை இல்லை – சிறி.அரசு

சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதத்தை இசைப்பதில் பிரச்சினைகள் எதுவும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.vajira-abevarththana

அரசியலமைப்பின் பிரகாரம் சிங்களமும் தமிழும் தேசிய மொழிகளாக வரையறை செய்யப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சர் வஜிர அபேயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். இதன்பிரகாரம் எந்தவொரு அரச நிகழ்விலும் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளிலும் இசைக்க முடியும் என பிரதமர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் கூறியுள்ளார்.

தேசிய கீதத்தை தமிழில் இசைப்பது புதிய நிகழ்வு அல்லவென சுட்டிக்காட்டிய அமைச்சர், 1948 ஆம் ஆண்டு இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்விலும் பல அரச நிகழ்வுகளிலும் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். தேசிய கீதத்தை கிளிநொச்சியில் வைத்து சிங்கள மொழியிலும் மாத்தறையில் வைத்து தமிழ் மொழியிலும் இசைப்பதில் எந்தவித பயனும் இல்லை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என வஜிர அபேவர்தன கூறியுள்ளார்.

நல்லிணக்கத்திற்காக அரசாங்கம் பல விடயங்களை செய்துள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், கடந்த ஆண்டு ஜனவரி 8 மற்றும் ஓகஸ்ட் 17 இல் பெற்ற தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து இன ஒருமைப்பாட்டை ஊக்குவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...