Designed by Iniyas LTD
சிரியாவிலுள்ள யார்மூக் அகதி முகாம் இஸ்லாமிய அரசு அமைப்பின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது
சிரியாவிலுள்ள யார்மூக் அகதி முகாம் தற்சமயம் கிட்டத்தட்ட முழுமையாகவே இஸ்லாமிய அரசு அமைப்பின் ஆயுததாரிகளுடைய கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக சிரியாவின் எதிர்க்கட்சிகள் குழு கூறுகிறது.
பாலஸ்தீன படைக்குழுக்கள் இரண்டு இடங்களில் சண்டையிட்டு வருகின்றன. இந்த முகாமின் தெற்கில் அவர்கள் இஸ்லாமிய அரசு ஆயுததாரிகளை எதிர்த்து மோதும் அதே நேரம் வடக்கில் அவர்கள் சிரியாவின் அரச படைகளை எதிர்த்து சண்டையிடுகிறார்கள்.
தங்களிடம் ஆயுதங்களுக்குரிய வெடிப்பொருட்கள் தீர்ந்துவிட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வாரத்தில் முன்னதாக இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் அகதிகள் முகாமின் பெரும்பகுதியைக் கைப்பற்றிய சண்டையில் குறைந்தபட்சம் பத்து பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்த அகதி முகாமில் வசிப்பவர்கள் வீடுகளுக்கு வெளியில் வருவதில்லை.
இந்த முகாமை சிரியாவின் அரச படைகள் முற்றுகையிட்டிருந்த நிலையில் இங்கு இஸ்லாமிய அரசு ஆயுததாரிகள் எப்படி வந்தார்கள் என்பது தெரியவில்லை என கூறுகின்றனர்