தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கென்ய பல்கலைக்கழக தாக்குதலுடன் சந்தேகிக்க படும் ஐந்து பேர் கைது

கென்ய பல்கலைக்கழகம் ஒன்றில் நூற்று நாற்பத்தெட்டு பேர் பலியாக காரணமாயிருந்த அல்ஷபாப் ஆயுததாரிகள் மேற்கொண்ட தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் மூவர் கிழக்கு நகரமான கரிஸ்ஸாவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒருங்கிணைந்து நடக்க உதவியிருந்தவர்கள் என கென்ய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.kenya_aftermath

கென்யாவில் முஸ்லிம்கள் அமைப்பு ரீதியாகவே திட்டமிடப்பட்டு ஒடுக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அல்ஷபாப், அங்கு நீண்ட கொடுரமான யுத்தம் ஒன்றை மேற்கொள்ளப்போவதாகவும் சூளுரைத்துள்ளது.

தாக்குதலில் உயிர் தப்பிய மாணவர்களை அவர்கள் வீடுகளில் கொண்டு விடும் வகையில் பேருந்து சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று சனிக்கிழமை பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். அவர் கிட்டத்தட்ட 50 மணி நேரம் அலுமாரி ஒன்றினுள் ஒளிந்திருந்திருந்தார்.

Comments
Loading...