தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிறீலங்காவிற்கான தனது சேவையை நிறுத்தியுள்ளது பிரிட்டிஷ் எயார்வேஸ்

இலங்கை செல்லும் தமது விமான பய­ணங்­களை ரத்துச் செய்­ததில் எந்­த­வி­த­மான அர­சியல் பிரச்­சி­னை­க­ளு­மில்லை என பிரிட்டிஷ் எயார்வேஸ் தெரி­வித்­துள்­ள­துடன் இலாபம் தொடர்­பான பிரச்­சினை கார­ண­மா­கவே விமா­னங்கள் இரத்துச் செய்­யப்­பட்­ட­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளதுஅடுத்த ஆண்டு முதல் இலங்­கைக்­கான தமது விமான சேவைகள் இரத்துச் செய்­யப்­படும் என பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறு­வனம் அண்­மையில் அறி­வித்­தி­ருந்­தது. அத­னைத்­தொ­டர்ந்து எழுந்த சர்ச்­சை­களை அடுத்து தகவல் வெளியிட்­டுள்ள பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறு­வ­னத்தின் தெற்­கா­சிய பிராந்­திய முகா­மை­யாளர் கிறிஸ்­டோபர் ஃபோர்டைஸ்,british-airways

வணிக நோக்­கத்தின் அடிப்­ப­டை­யி­லேயே பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறு­வனம் உலகம் முழு­வ­திலும் உள்ள நக­ரங்­க­ளுக்கு தனது விமான சேவை­களை நடத்தி வரு­கி­றது. அவ்­வா­றான நிலையில் இலாபம் தொடர்­பான பிரச்­சினை காணப்­ப­டு­வதன் கார­ண­மா­கவே கொழும்பு மற்றும் லண்டனுக்கிடையிலான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்றார்

Comments
Loading...