Designed by Iniyas LTD
சிறுமிகளை வல்லுறவுக்கு உட்படுத்தினால் இனி தூக்குத்தண்டனை!
சிறுமிகளுக்கு எதிராக பாலியல் வன்முறையில் ஈடுபட்டால் அதிகபட்ச தண்டனை எனப்படும் தூக்கு தண்டனையை வழங்க வழி செய்யும் சட்டத்தை மத்திய பிரதேச அரசு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றியுள்ளது. இந்தியாவின் வடமாநிலங்களான பீகார், உத்தரபிரதேஷ், மத்திய பிரதேஷ், ஒடிசா மற்றும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கையை பெண்ணிய ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இதனைத்தொடர்ந்து சிவராஜ் சிங் சௌகன் தலைமையிலான மத்திய பிரதேச அரசு சிறுமிகளுக்கு எதிராக பாலியன் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வழிவகை செய்யும்வகையில் சட்டத்தை மாநில சட்டப்பேரவையில் இயற்றியுள்ளது.